ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள சன்வாரியா சேத் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை வழிபாடு மேற்கொண்டார்.
பிரதமர் மோடியுடன் மாநில தலைவர் சிபி ஜோஷி, சித்தோர்கர் மக்களவை எம்.பி. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சன்வாரியா கோயிலில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
படிக்க: அக்டோபர் மாத பலன்கள் (மேஷம் - கன்னி)
சித்தோர்கரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இந்தாண்டு இறுதியில் ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.