ஆந்திரம், தெலங்கானா மாநிலத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இடதுசாரி பயங்கரவாத வழக்குகள், மாவோயிஸ்டுகள், நக்சலைட் தொடர்பான வழக்குகளில் ஆஜராகிய வழக்குரைஞர்கள் தொடர்பாக என்ஐஏ.க்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
படிக்க: அக்டோபர் மாத பலன்கள் (மேஷம் - கன்னி)
அதன்படி, குண்டூர், நெல்லூர் , கடப்பா, திருப்பதி, அனந்தபூர் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு தலைவர்கள் மற்றும் வழக்குரைஞர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.