பிரதமர் மோடி சத்தீஸ்கர்,தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு நாளை(அக்.3) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சமீப மாதங்களாகத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரதமர் மோடி தனது அரசியல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஸ்கர் மாநிலத்துக்கு நாளை செல்லவுள்ளார். அங்கு ரூ.23,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நாகர்னரில் உள்ள என்எம்டிசி ஸ்டீல் லிமிடெட் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். மேலும் அவர் ஜக்தல்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கான அடிக்கல்லையும் நாட்ட உள்ளார்.
படிக்க: அக்டோபர் மாத பலன்கள் (மேஷம் - கன்னி)
தெலங்கானா பயணத்தின்போது, பிரதமர் மோடி ரூ.8 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். தெலங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தின் 800 மெகாவாட் அலகு மற்றும் பல்வேறு ரயில் உள்கட்டமைப்பு திட்டங்களையும் மோடி தொடங்க உள்ளார்.
பிரதான் மந்திரி - ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் கட்டப்படவுள்ள தெலுங்கானா முழுவதும் 20 முக்கியமான பராமரிப்பு மையத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இந்த ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.