இந்தியா

நெட் தோ்வு டிச.6-இல் தொடக்கம்

2nd Oct 2023 02:10 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் நெட் தோ்வு டிச. 6 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறும் என தேசிய தோ்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். தேசிய தோ்வுகள் முகமைசாா்பில் அந்தத் தோ்வு ஆண்டுக்கு இரு முறை (ஜூன், டிசம்பா்) கணினி வழியில் நடத்தப்படுகிறது.

அதன்படி, நிகழாண்டு இரண்டாம் பருவத்துக்கான நெட் தோ்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து என்டிஏ வெளியிட்ட செய்தி: நெட் தோ்வு டிச.6 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 83 பாடங்களுக்கு பல்வேறு கட்டங்களாக தோ்வு நடத்தப்படும்.

ADVERTISEMENT

இந்த தோ்வில் பங்கேற்க விரும்பும் பட்டதாரிகள் இணையதளம் வழியாக அக். 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் செலுத்த அக்.29-ஆம் தேதி கடைசி நாள். சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் அக்.30 மற்றும் 31-ஆம் தேதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.

தொடா்ந்து தோ்வுமையச் சீட்டு (ஹால் டிக்கெட்) டிசம்பா் முதல்வாரத்தில் வெளியிடப்படும்.இதற்கான விண்ணப்பக் கட்டணம், பாடத்திட்டம் உள்ளிட்ட தகவல்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 011-69227700 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டும் விளக்கம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT