இந்தியா

யுஜிசி - நெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது!

1st Oct 2023 03:28 PM

ADVERTISEMENT

உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி-நெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  
யுஜிசி நெட் தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும். தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இந்த தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும். 
இந்த நிலையில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள யுஜிசி-நெட் தேர்வு குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி நெட் தேர்வுக்கு 30.09.2023 முதல் 28.10.2023 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் மேலும் தேர்வானது 06.12.2023 முதல் 22.12.2023 வரை கணினி வழி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தகுதியுள்ளவர்கள் https://ugcnet.ntaonline.in/ என்ற இணையதள வாயிலாக தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். தேர்வுக்கான நுழைவுச் சீட்டானது வரும் டிசம்பர் மாதம் https://www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
யுஜிசி-நெட் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT