கேரளத்தில் பெரியாறு ஆற்றில் கார் கவிழ்ந்ததில் 2 இளம் மருத்துவர்கள் பலியானார்கள்.
கேரளத்தில் மருத்துவர்கள் சென்ற கார் கோதுருத் அருகே பெரியாற்றில் இன்று அதிகாலை கவிழ்ந்தது. அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்துக்கு விரைந்த அவர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இருப்பினும், இந்த விபத்தில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த அத்வைத் (29), அஜ்மல் (29) ஆகிய இருவரும் பலியானார்கள். அவர்களுடன் பயணித்த மேலும் 3 பேர் காயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது. கூகுள் வரைபடத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி ஓட்டுநர் அப்பகுதியை அடைந்ததாகவும், கனமழை மற்றும் குறைந்த பார்வைதிறன் விபத்துக்கு வழிவகுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.