இந்தியா

தெலங்கானாவில் 13 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர்!

1st Oct 2023 05:38 PM

ADVERTISEMENT

தெலங்கானாவில் ரூ.13,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 1) தொடங்கி வைத்தார்.

தெலங்கானாவில் நாக்பூர்-விஜயவாடா பொருளாதார வழித்தடம் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் இன்று தொடங்கி வைத்தார். மாநிலத்தில் ரூ.6400  கோடி மதிப்பில் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ரூ.900 கோடி மதிப்பில் மத்திய பழங்குடியினர் பல்கலைக் கழகம் தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் அமையவுள்ளது எனவும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் தெலங்கானாவில் தேசிய மஞ்சள் ஆணையம் மத்திய அரசினால் அமைக்கப்படும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இதையும் படிக்க: வாரத்தில் 5 நாள்கள் அலுவலகத்திலிருந்து பணியாற்ற ஊழியர்களுக்கு டிசிஎஸ் உத்தரவு!

ஹைதராபாத்-விசாகப்பட்டினம் இடையே ரூ.2,460 கோடி மதிப்பில் பொருளாதார வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் பாரத்மாலா பாரியோஜனா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. புதிய ரயில் வழித்தடங்களும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

தெலங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT