இந்தியா

தூய்மைப் பணிகளில் ஈடுபட்ட மோடி, அமித்ஷா!

1st Oct 2023 01:22 PM

ADVERTISEMENT


காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். 

காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின்பேரில், தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் பலர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். 

காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள தூய்மை இந்தியா திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.  
அதனைத் தொடர்ந்து பாஜக தேசிய செயலர் ஜெ.பி. நட்டா, உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். 

ராஜஸ்தானில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மத்தியப் பிரதேசத்தில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தில்லியில் ஹர்திப் சிங் பூரி, கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த், ஹிமாச்சலில் அனுராக் தாக்குர் உள்ளிட்டோர் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர். 

ADVERTISEMENT

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரில் சாலையில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சாலையை சுத்தம் செய்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT