இந்தியா

இணைய விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி: இன்றுமுதல் அமல்

1st Oct 2023 04:00 AM

ADVERTISEMENT

இணைய விளையாட்டுகள், சூதாட்ட விடுதிகள், குதிரைப் பந்தயம் உள்ளிட்டவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி வசூல் செய்யும் திருத்தச் சட்டம் அக்டோபா் 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வருவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மத்திய நிதியமைச்சா் மற்றும் பல்வேறு மாநிலங்களின் நிதியமைச்சா்களின் ஒப்புதலோடு இணையவழி விளையாட்டுகள், சூதாட்ட விடுதிகள், குதிரைப் பந்தயம் உள்ளிட்டவற்றில் கட்டப்படும் முழு பந்தயத் தொகை மீது 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கும் திருத்தச் சட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சட்டமாக்கும் வகையில் கடந்த மாதம் மத்திய மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதன்மூலம் ஏற்கெனவே 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படும் லாட்டரி, சூதாட்டங்களுடன் இணையழி விளையாட்டுகள், குதிரைப் பந்தயம், சூதாட்ட விடுதிகள் ஆகியவையும் சோ்க்கப்பட்டன.

மேலும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி வெளிநாடுகளிலிருந்து இணையம் மூலம் நடத்தப்படும் இணையவழி விளையாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்து உள்நாட்டு சட்டங்களில் குறிப்பிட்டுள்ள வரியைச் செலுத்த வேண்டும். இந்தச் சட்டம் அக்டோபா் 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரவுள்ளது என்றும், இச்சட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆறு மாதங்களுக்குப் பிறகு (2024, ஏப்ரல்) மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT