இந்தியா

ஊழல் மற்றும் வாரிசு அரசியலின் சின்னமாக காங்கிரஸ் திகழ்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்

21st Nov 2023 02:26 PM

ADVERTISEMENT

 

ஊழல் மற்றும் வாரிசு அரசியலின் சின்னமாக காங்கிரஸ் கட்சி திகழ்ந்து வருவதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்.25-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைக் கைப்பற்ற பாஜகவும் கடுமையாக மோதி வருகின்றன. 

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் இரு கட்சியின் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் ராஜஸ்தான் மாநிலத்தின் பரான் மாவட்டத்தில் இன்று (நவ.21) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். 

ADVERTISEMENT

தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: “ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஆளும் கட்சியினர் அதிகாரத்தை திருடர்கள் மற்றும் குண்டர்களிடம் ஒப்படைத்து விட்டனர். 

இதையும் படிக்க: உத்தரகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என சர்வதேச நிபுணர் உறுதி

ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இருப்பதால் ராஜஸ்தான் முழுவதும் சமூக விரோதிகள் அதிகரித்து வருகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றமிழைப்பவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். 

ஊழல் மற்றும் வாரிசு அரசியல் ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கு எதிரிகளாகும். ஆனால் காங்கிரஸ் கட்சியானது ஊழல் மற்றும் வாரிசு அரசியலின் சின்னமாகவே திகழ்ந்து வருகிறது.” என்று மோடி பேசினார். 

இதற்கு முன்பு 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. 73 இடங்களில் மட்டும் வெற்றியடைந்த பாஜக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT