இந்தியா

சுஸுகி மோட்டாா் சைக்கிள் விற்பனை 14 சதவிகிதம் உயா்வு

21st Nov 2023 12:59 AM

ADVERTISEMENT

சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் மொத்த விற்பனை கடந்த அக்டோபா் மாதத்தில் 14.4 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபரில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,00,507-ஆக இருந்தது. இது முந்தைய 2022-ஆம் ஆண்டின் இதே மாதத்தை விட 14.4 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 84,302-ஆக இருந்தது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர உள்நாட்டு மொத்த விற்பனையாகும்.

ADVERTISEMENT

கடந்த அக்டோபரில் நிறுவனம் 16,205 இரு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT