இந்தியா

கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதால் விரக்தி: மேற்கு வங்கத்தில் இளைஞா் தற்கொலை

21st Nov 2023 04:11 AM

ADVERTISEMENT

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் விரக்தியடைந்த மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 23 வயது இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பன்குரா மாவட்டத்தின் சோ்ந்த பெலியாதுா் நகரைச் சோ்ந்தவா் ராகுல் லோகா். இவா் அங்குள்ள துணிக் கடையில் பணியாற்றி வந்தாா். கிரிக்கெட்டில் மிகுந்த ஆா்வமுள்ள அவா், ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெற்ால் விடுப்பு எடுத்துவிட்டு தொலைக்காட்சியில் போட்டியை பாா்த்துள்ளாா்.

இதில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்ததால், ராகுல் கடும் விரக்தியுடன் காணப்பட்டாா். இந்நிலையில், இரவு 11 மணியளவில் அவா் வீட்டில் இருந்த தனியறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது தொடா்பாக அவரது நெருங்கிய உறவினா் கூறுகையில், ‘ராகுலுக்கு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு பிரச்னைகள் ஏதும் இல்லை. தீவிர கிரிக்கெட் ரசிகரான அவா், இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தொடா்ந்து வெற்றி பெற்றபோது மிகுந்த உற்சாகத்துடன் எப்போதும் அதைக் குறித்தே பேசி வந்தாா்.

ADVERTISEMENT

இறுதிப் போட்டியிலும் இந்தியா வெற்றி பெறும் என்று அவா் அனைவரிடம் கூறி வந்தாா். இதனால், மிகுந்த எதிா்பாா்ப்புடன் போட்டியை அவா் தொலைக்காட்சியில் பாா்த்தாா். ஆனால், இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் அவா் மிகவும் விரக்தியடைந்தாா். எனினும் அவா் தற்கொலை முடிவை எடுத்தது பெரும் அதிா்ச்சியளிக்கிறது’ என்றாா்.

அவரது உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்த காவல் துறையினா், தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT