இந்தியா

'தில்லியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டுள்ளது' - அமைச்சர் கோபால் ராய்

18th Nov 2023 12:18 PM

ADVERTISEMENT

தில்லியில் காற்றின் திசை மாறுபட்டால் காற்றின் தரம் சற்று மேம்பட்டுள்ளதாக தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். 

கடந்த ஓரிரு வாரங்களாக தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பல நாள்களாக காற்றின் தரக் குறியீடு 400  புள்ளிகளுக்கு மேல் சென்று 'கடுமை' பிரிவில் நீடித்து வந்தது. 

இந்நிலையில் இன்று காற்றின் தரம் 400க்கு கீழ் குறைந்து 'மிகவும் மோசம்' (very poor) பிரிவுக்குச் சென்றுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது:

ADVERTISEMENT

தில்லியில் அதிகரித்துள்ள காற்று மாசுவைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தீபாவளி பண்டிகையின்போது காற்றின் தரம் 'கடுமை' பிரிவில் இருந்து வந்தது. தற்போது காற்றின் திசை மாறியுள்ளது. இதனால் காற்றின் தரம் சற்று மேம்பட்டுள்ளது. காற்றின் தரக் குறியீடு 335 ஆக உள்ளது. மேலும் சில நேர்மறையான விஷயங்களை எதிர்பார்க்கிறோம். நிலைமை சீக்கிரம் சரியானால் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள். அடுத்த 2-3 நாள்களில் அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிப்பது மேலும் குறையும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT