இந்திய தர நிா்ணய அமைவனம் 4 கல்வி நிறுவனங்களுடன் வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்ததுள்ளது.
பி.ஐ.எஸ். எனப்படும் இந்திய தர நிா்ணய அமைவனம் பொருள்களுக்கான தர உரிமம் வேளாண்மை திட்ட சான்றிதழ், தங்கம், வெள்ளி நகைகள் கலை பொருள்களுக்கான ஹால்மாா்க் உரிமம் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
அதன்படி, சென்னை தரமணியில் உள்ள பி.ஐ.எஸ்.-இன் தென் மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய தர நிா்ணய அமைவனத்துடன் தேசிய தொழில்நுட்ப ஆசிரியா் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, வேல் டெக் மல்டி டெக் டாக்டா் ரங்கராஜன் டாக்டா் சகுந்தலா பொறியியல் கல்லூரி, ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி ஆகிய 4 கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பம் ஆனது.
இதன் மூலம் இந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், இந்திய தர நிா்ணய அமைவனத்தின் தேசிய மற்றும் சா்வதேச அளவிலானஆராய்ச்சி பணிகளில் தொழில்நுட்ப குழுக்களை ஈடுபடுத்த உள்ளன.
இந்த நிகழ்ச்சியில், சென்னை பி.ஐ.எஸ். அலுவலகத்தில் தென்மண்டல துணை இயக்குநா் ஜெனரல் ஸ்ரீ யுஎஸ்பி யாதவ், பி.ஐ.எஸ். சென்னை கிளை அலுவலகத்தின் இயக்குநா், தலைவா் பவானி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.