இந்தியா

வளர்ந்த இந்தியாவைக் கட்டமைக்க கடினமாக உழைப்போம்: பிரதமர் மோடி

DIN

இந்தியாவை வளர்ந்த தேசமாக கட்டமைக்க நாங்கள் இன்னும் கடினமாக உழைப்போம் என தனது அரசின் 9-ஆம் ஆண்டு நிறைவையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்குத் தெரிவித்துள்ளார்.
 மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து நாடு முழுவதும் பாஜகவினர் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாஜக தொண்டர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்றிக் கூறி பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
 தேசத்துக்கான சேவையில் இன்று 9- ஆம் ஆண்டை நாங்கள் நிறைவு செய்திருக்கிறோம். உங்களுக்கு நான் தன்னடக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 9 ஆண்டுகால ஆட்சியில், மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து முக்கிய முடிவுகளும் நிறைவேற்றப்பட்டன, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. வளர்ந்த இந்தியாவைக் கட்டமைக்க நாங்கள் தொடர்ந்து கடினமாக உழைப்போம்.
 கடந்த 9 ஆண்டுகளில் ஏழைகளின் வாழ்வாதாரத்தையும் கண்ணியத்தையும் நிலைநாட்ட நாங்கள் பாடுபட்டுள்ளோம். எண்ணிலடங்கா முயற்சிகள் மூலமாக தேசத்தில் பல கோடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றியமைத்தோம்.
 ஒவ்வொரு குடிமகனும் வாழ்வில் முன்னேற்றம் காணவும், அவர்களின் கனவு நிறைவேறவும் எங்கள் பணி தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில் பாஜக அரசின் நலத்திட்டப் பணிகள் தொடர்பான விளக்கப்படத்தையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
 பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து செவ்வாய்க்கிழமை முதல் ஜூன் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாட அக்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் புதன்கிழமை நடைபெறும் பேரணியில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
 பாஜக ஆட்சி செய்யும் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் திங்கள்கிழமை அன்றே பாஜகவின் சாதனைகளை நாடு முழுவதும் கொண்டு சென்றனர்.
 உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்திருப்பது முதல் தேசத்தின் பாதுகாப்பு வரை அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், மக்கள் நலத் திட்டப் பணிகளான வீடு கட்டும் திட்டம், கழிவறை கட்டும் திட்டம், குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி, உற்பத்தித் துறையின் முன்னேற்றத்துக்கான அரசின் முயற்சிகள் போன்ற பணிகளை பத்திரிகையாளர்கள் சந்திப்பு மூலம் நாட்டு மக்களுக்கு அவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT