இந்தியா

பாஜக ஆட்சியின் 9-ஆம் ஆண்டு நிறைவு: ஒரு மாத கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு

DIN

மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று 9 ஆண்டுகால நிறைவையொட்டி நாடு முழுவதும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் ஒரு மாத காலக் கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
 இதுதொடர்பாக பிரசார பொறுப்பாளரும் தேசிய பொதுச் செயலாளருமான தருண் சுக் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
 பாஜகவின் ஒரு மாத கால உற்சாகக் கொண்டாட நிகழ்ச்சியை பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் புதன்கிழமை தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து ஜூன் 30-ஆம் தேதிவரை இக்கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
 நாடு முழுவதும் 51 பேரணிகளில் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றுப் பேசுவார்கள். பிரதமர் மோடியும் இதுபோன்ற பொதுக் கூட்டங்களில் பங்கேற்பார். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரும் இதில் பங்கேற்பார்கள். இக்கொண்டாட்டம் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக நடத்தப்படும்.
 மக்களவைத் தொகுதி அளவில் 500 பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும். நாடு முழுவதும் ஒவ்வொரு மக்களவைத் தொகுதி அளவிலும் 1,000 பேர் வீதம் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரபல பாஜக குடும்பத்தினர் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்.
 நாட்டின் 543 மக்களவைத் தொகுதிகளையும் கட்சி 144 தொகுப்புகளாகப் பிரித்துள்ளது. ஒவ்வொரு தொகுப்பும் தலா 3 முதல் 4 மக்களவைத் தொகுதிகளைப் பெற்றிருக்கும்.
 இந்த மண்டலத்தில் இரண்டு மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் 8 நாள்கள் வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பர். இந்நிகழ்ச்சிகளில் அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளையும் கலந்துகொள்ளச் செய்து அவர்களுக்கு அரசின் நல்லாட்சிக்கான அறிக்கை அட்டைகள் விழாவின்போது வழங்கப்படும்.
 பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சி லஞ்சம், ஊழலில் திளைத்திருந்தது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஊழலில் எவ்வித சகிப்புதன்மையின்றி செயல்படுவதை மக்கள் அறிவர்.
 இந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வாக்குச்சாவடி அளவில் பாஜகவினர் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று அரசின் சாதனைகளைத் தெரிவித்து ஆதரவு கோருவர். இதற்காக வாக்குச்சாவடி அளவில் 16 லட்சம் பேரை பாஜக ஈடுபடுத்த உள்ளது என்றார்.
 அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் வெற்றிக்கு வலுசேர்க்கும் வகையில் இம்முயற்சியை பாஜக மேற்கொண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT