இந்தியா

பெங்களூருவில் மழையால் வேரோடு சாய்ந்த மரங்கள்

31st May 2023 03:00 PM

ADVERTISEMENT

 

பெங்களூரு: நேற்று முதல் பலத்த மழை பெய்து வரும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முதல் ஐந்து நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், மழை மற்றும் காற்றின் காரணமாக சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் லேசான மழை பெய்தாலே, பெரும் வெள்ளக்காடாகிவிடும் என்பதால், ஐந்து நாள்களுக்கு அதுவும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

ADVERTISEMENT

அதாவது, கர்நாடக மாநிலத்தின் கடற்கரை நகரங்கள் மற்றும் தெற்கு உள் மாவட்டங்களின் பல இடங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மழையுடன் காற்றும் வீசக்கூடும். வரும் வெள்ளிக்கிழமை வரை கர்நாடகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை பெய்த மழையால் கர்நாடகத்தின் ஹாவேரி, ஹடகலி உள்ளிட்ட பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் பல சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT