பிரபல மென்பொருள் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் அலுவலகம் சென்றும் ஒரு மாதத்தில் 12 நாள்களுக்கு வேலை செய்யவில்லை என்பதை நிர்வாகம் கண்டறிந்துள்ளது.
டாடா குழுமத்துக்குச் சொந்தமான டிசிஎஸ் நிறுவனம், 150க்கும் மேற்பட்ட இடங்களில் அலுவலகங்களை நிறுவி மென்பொருள் துறையில் கோலோச்சி வருகிறது.
இந்நிறுவனத்தில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரிந்து வருகின்றனர். கரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்குப் பிறகு அலுவலகத்துக்கு வந்து பணிபுரிய மென்பொருள் நிறுவன ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
படிக்க | டிசிஎஸ் நிறுவனத்துக்கு புதிய சிஇஓ நியமனம்!
இந்நிலையில், டிசிஎஸ் நிறுவனத்தில் அலுவலகத்திற்கு வந்தும் மாதத்தில் 12 நாள்களுக்கு ஊழியர்களில் சிலர் வேலை செய்யாததை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இதனை எச்சரித்து அந்த ஊழியர்களுக்கு டிசிஎஸ் நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. டிசிஎஸ் அலுவலக சூழலை அனைத்து ஊழியர்களும் அனுபவிக்க வேண்டும் என்பது எங்கள் குறிக்கோள். அதனால் உங்கள் பணிகளை இனி தரவுகளாக கொடுக்க வேண்டும் என மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.