இந்தியா

இந்தியா வந்தார் நேபாள பிரதமர் பிரசண்டா

31st May 2023 05:52 PM

ADVERTISEMENT

 

நேபாளத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் 3-ஆவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்ற பிரசண்டா, 4 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை வியாழக்கிழமையன்று பிரசண்டா சந்தித்துப் பேசி, இரு தரப்பிலும் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா - நேபாளம் இடையேயான இருதரப்பு உறவில் பிரதமா் புஷ்ப கமல் தாஹால் ‘பிரசண்டா’வின் இந்தப்  பயணம் புதிய வரலாற்றைப் படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

மூன்றாவது முறையாக நேபாள பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டதற்கு பிறகு பிரசண்டா மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணமாக இது அமைந்துள்ளது. புது தில்லி விமான நிலையம் வந்த நேபாள பிரதமருக்கு மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் மீனாட்சி லேகி வரவேற்பு அளித்தார்.

முன்னதாக தனது இந்திய பயணம் குறித்து, அந்நாட்டின் ‘காந்திபூா் டெய்லி’ பத்திரிகைக்கு அவா் அளித்த பேட்டியில், ‘இந்தியாவுக்கான எனது பயணத்தை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் நேபாள அரசு சாா்பில் செய்யப்பட்டுள்ளன. இந்தியா சாா்பிலும் முன்னேற்பாடுகள் தீவிர கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிகிறேன். எனது பயணம் இந்தியா-நேபாளம் இடையிலான இருதரப்பு உறவில் புதிய வரலாற்றைப் படைக்கும்.

பயணத்தின்போது நடைபெறுகிற சந்திப்புகளுக்குப் பிறகு நேபாளம் புதிய சாதனைகளைப் படைக்கும். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு புதிய உச்சத்தை எட்டும் என நம்புகிறேன். இருதரப்பு உறவுகளை வலுபடுத்தவும், பொருளாதார ஒத்துழைப்பில் புதிய வழிகளைக் கண்டறியவும் இப்பயணம் வாய்ப்பாக அமையும்.

சட்டபூா்வமாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ முதல் வெளிநாடு பயணமாக இந்தியாவுக்கு செல்ல எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால், அந்நாட்டுடனான சிறப்பான உறவு காரணமாக இந்தியாவைத் தோ்வு செய்துள்ளேன் என்றார்.

இந்தப் பயணத்தின்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரையும் அவர் சந்தித்துப் பேசி திட்டமிட்டுள்ளார்.
 

Tags : nepal
ADVERTISEMENT
ADVERTISEMENT