இந்தியா

இது தான் புதிய இந்தியாவா? பிரிஜ் பூஷணுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் கபில் சிபல்

31st May 2023 03:25 PM

ADVERTISEMENT


போக்சோ சட்டம் இருக்கும் நாட்டில்தான் பாலியல் புகாருக்குள்ளான பிரிஜ் பூஷணை உடனடியாகக் கைது செய்வது பொருந்தாமல் இருக்கிறது. இதுதான் புதிய இந்தியாவா என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்வோரை உடனடியாகக் கைது செய்ய போக்சோ சட்டம் இருக்கும் நிலையில், பாஜக எம்.பி.யும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சிங் மட்டும் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதால், அவரைக் கைது செய்ய வழியில்லை என்று கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவா் பிரிஜ் பூஷண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. எனவே அவரை கைது செய்ய வலியுறுத்தி, மல்யுத்த வீரா்கள் கடந்த ஒரு மாதகாலமாக தில்லி ஜந்தா் மந்தரில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது நாடாளுமன்றம் நோக்கி அவா்கள் பேரணியாக செல்ல முடிவு செய்தனா். எனவே அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியது மட்டுமின்றி, மல்யுத்த வீரா்கள் வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக், பஜ்ரங்க் புனியா ஆகியோரை கைது செய்து அழைத்துச் சென்றனா். இது தவிர மல்யுத்த வீராங்கனைகளை போலீஸாா் தரதரவென இழுத்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

அத்துடன் ஜந்தா் மந்தரிலிருந்து போராட்டக்காரா்களை அகற்றிய போலீஸாா் மீண்டும் அங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று அறிவித்தனா்.

இந்த நிலையில், கபில் சிபல் தனது டிவிட்டர் பக்கத்தில், பிரிஜ் பூஷண் சிங்: போக்சோ சட்டம் இருக்கிறது மற்றும் 164 பேரின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பிரிஜ் பூஷணைத் தவிர மற்ற அனைத்துக் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் காரணம்..
1) அவர் பாஜகவை சேர்ந்தவர்
2) மல்யுத்த வீராங்கனைகள் முக்கியமல்ல; வாக்குகள்தான் முக்கியம்.
3) மத்திய அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை.
இதுதான் புதிய இந்தியாவா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT