இந்தியா

ரூ. 500 கள்ளநோட்டின் எண்ணிக்கை 14% அதிகரிப்பு!

DIN

கடந்த நிதியாண்டை காட்டிலும், 2022-23ஆம் நிதியாண்டில் ரூ.500 கள்ளநோட்டின் எண்ணிக்கை 14 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை ஆண்டு அறிக்கையை வெளியிட்டது. அதில் நாட்டில் புழங்கும் கள்ளநோட்டுகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த நிதியாண்டில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 79,669 கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 2022-23ஆம் நிதியாண்டில் 91,110 கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் 14 சதவிகிதம் அதிகமாகும்.

இதே காலகட்டத்தில் 2,000 ரூபாய் கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டில் 2,000 ரூபாய் கள்ளநோட்டுகள் 13,604 கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 2022-23இல் 9,806 நோட்டுகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 20 ரூபாய் நோட்டுகள் கடந்த நிதியாண்டை காட்டிலும் 8.4 சதவிகிதம் கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ரூ.10, ரூ.100 கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மொத்த பண மதிப்பை கணக்கிடுகையில்,  2021-22இல் 2,30,971 கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 2023இல் 2,25,769 கள்ளநோட்டுகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் 2 சதவிகிதம் குறைவு என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

வாக்களிப்பவா்களை ஊக்குவிக்க ஹோட்டல், உணவகங்களில் தள்ளுபடி: தில்லி மாநகராட்சி நடவடிக்கை

நாகை மாவட்ட மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு நிறுத்தம்: முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே. நிஜாமுதீன் கண்டனம்

திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயிலில் அம்மன் பவனி

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

SCROLL FOR NEXT