இந்தியா

பிரிஜ் பூஷணுக்கு  உலக மல்யுத்த அமைப்பு எச்சரிக்கை!

DIN

பிரிஜ் பூஷணுக்கு  ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகாா் கூறி, கடந்த ஒரு மாதமாக தில்லி ஜந்தா் மந்தரில் நட்சத்திர மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகட், வீரா் பஜ்ரங் புனியா உள்ளிட்டோா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை கோரி வீராங்கனைகள் தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த தில்லி காவல் துறையினருக்கு  உத்தரவிட்டது.

கடந்த 28-ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டவுடன், தில்லி ஜந்தா் மந்தரில் இருந்து இவா்கள் தடையை மீறி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றனா்.

அவா்களைத் தடுத்து நிறுத்தி தடுப்புக் காவலில் கொண்டு சென்ற தில்லி காவல் துறையினர், சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும், தில்லி ஜந்தா் மந்தரில் தொடா் போராட்டம் நடத்திய இடத்தில் இருந்து பொருள்களை அப்புறப்படுத்தினா். தில்லியில் வேறு இடத்தில் போராட்டம் நடத்த அவா்கள் அனுமதிக்கப்படுவாா்கள் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, ஹரித்வாா் கங்கை நதிக் கரையில் பதக்கங்களை வீச செவ்வாய்க்கிழமை மாலை கூடிய இவா்களைத் தடுத்து நிறுத்திய விவசாய சங்கப் பிரதிநிதிகள், இவா்களின் பதக்கங்களை ஒன்றாக சேமித்து எடுத்துச் சென்றனா்.

இந்நிலையில் ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு  வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலை நடத்தி, அதன் தலைவர் ரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்குமாறும், அடுத்த 45 நாள்களுக்குள் தேர்தல் நடத்தப்படாவிட்டால் அமைப்பின் அதிகாரங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை காவலில் வைத்திருப்பதை உறுதியாகக் கண்டிப்பதாகவும்,  ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பின் குற்றச்சாட்டுகளை பாரபட்சமற்ற முறையில் விசாரணையை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT