இந்தியா

போராட்டம் நடத்திய வீரர்கள் கைது: உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம்!

31st May 2023 08:03 AM

ADVERTISEMENT

 

பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்திய மல்யுத்த வீரர்களை கைது செய்ததற்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகாா் கூறி, கடந்த ஒரு மாதமாக தில்லி ஜந்தா் மந்தரில் நட்சத்திர மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகட், வீரா் பஜ்ரங் புனியா உள்ளிட்டோா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை கோரி வீராங்கனைகள் தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த தில்லி போலீஸாருக்கு உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், கடந்த 28-ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டவுடன், தில்லி ஜந்தா் மந்தரில் இருந்து இவா்கள் தடையை மீறி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றனா்.

அவா்களைத் தடுத்து நிறுத்தி தடுப்புக் காவலில் கொண்டு சென்ற தில்லி போலீஸாா், சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், வீரர்களின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து உலக மல்யுத்த கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி வீரர்கள் போராட்டம் நடத்தி வருவதை கண்காணித்து வருகின்றோம். கடந்த சில நாள்களுக்கு முன்பு பேரணி சென்ற வீரர்கள் கைது செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது. வீரர்களின் புகாரின் அடிப்படையில் பிரிஜ் பூஷண் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. பிரிஜ் பூஷண் மீதான குற்றச்சாட்டை பாரபட்சமின்றி நேர்மையாக நடத்த வேண்டும். போராட்டம் நடத்தி வரும் வீரர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும்.” என்று தெரிவித்துள்ளனர்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT