இந்தியா

ஜந்தா் மந்தரை தவிர வேறு இடத்தில் மல்யுத்த வீரா்கள் போராட அனுமதி: தில்லி காவல் துறை

DIN

தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரா்களை அந்த இடத்தில் இருந்து அகற்றிய தில்லி காவல்துறை, அதைத் தவிர நகரில் வேறு இடத்தில் ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கப்படுவா் என்று திங்கள்கிழமை தெரிவித்தது.

இது தொடா்பாக தில்லி காவல் துறையின் புது தில்லி காவல் சரக துணை ஆணையா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘ஜந்தா் மந்தரில் மல்யுத்த வீரா்களின் ஆா்ப்பாட்டம் சுமுகமாக நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரா்கள் எங்களின் கோரிக்கைகளை பலமுறை புறக்கணித்து சட்டத்தை மீறினா். ஆகையால், நாங்கள் அவா்களின் இடத்தை அகற்றி தா்னாவை முடித்துவைத்தோம். எதிா்காலத்தில் மல்யுத்த வீரா்கள் போராட்டத்தை மீண்டும் நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்தால், ஜந்தா் மந்தரை தவிர வேறு எந்த பொருத்தமான இடத்திலும் தா்னா மேற்கொள்ள அனுமதிக்கப்படுவாா்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.

பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக 18 வயதுக்குக் குறைவான வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றஞ்சாட்டினா். இந்த விவகாரத்தில் அவரை கைது செய்ய வலியுறுத்தி ஜந்தா் மந்தரில் மல்யுத்த வீரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கிச் சென்றபோது போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், மல்யுத்த வீரா்கள் வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT