இந்தியா

குறைந்த வாராக் கடன்: மகாராஷ்டிர வங்கி முதலிடம்

DIN

கடந்த நிதியாண்டில் மிகக் குறைந்த வாராக் கடன் விகிதத்தைக் கொண்டிருந்த வங்கிகளின் பட்டியலில் மகாராஷ்டிர வங்கி (பிஓஎம்) முதலிடம் பிடித்துள்ளது.

இது குறித்து வங்கிகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

ஏப்ரல் 2022 முதல் மாா்ச் 2023 வரையிலான கடந்த நிதியாண்டில் அனைத்து வங்கிகளின் வாராக் கடன் மதிப்பு ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது.

அந்த வங்கிகளில் மகாராஷ்டிர வங்கியின் வாராக் கடன் விகிதம் 0.25 சதவீதமாகும். இதுவே கடந்த ஆண்டின் குறைந்தபட்ச வாராக் கடன் விகிதமாகும்.

0.27 சதவீத வாராக் கடனுடன் ஹெச்டிஎஃப்சி வங்கி இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் கோட்டக் மஹிந்திரா வங்கி உள்ளது. அந்த வங்கியின் வாராக் கடன் கடந்த நிதியாண்டில் 0.37 சதவீதமாக உள்ளது.

பொதுத் துறை வங்கிகளைப் பொருத்தவரை, கடந்த நிதியாண்டின் வாராக் கடன் விகிதத்தில் மகாராஷ்டிர வங்கிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. அந்த வங்கியின் வாராக் கடன் விகிதம் 0.67 சதவீதமாகும். இந்தப் பட்டியலில் 0.89 சதவீத வாராக் கடனுடன் பரோடா வங்கி 3-ஆவது இடத்தில் உள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT