இந்தியா

கங்கையில் கரையும் பதக்கங்கள்! மல்யுத்த வீரர்கள் ஹரித்வார் வருகை!!

30th May 2023 06:35 PM

ADVERTISEMENT


இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது அளிக்கப்பட்ட பாலியல் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்கள் பதக்கங்களை கங்கை நதியில் வீச வருகைபுரிந்துள்ளனர். 

சர்வதேச போட்டிகளில் வென்று இந்தியாவுக்கு பெருமைத் தேடித்தந்த தங்களின் பதக்கங்களை, உத்தரப் பிரதேசத்திலுள்ள ஹரித்வார் கங்கை நதியில் வீசுவதற்காக வந்துள்ளனர். 

படிக்கநாட்டுக்காக நாங்கள் பெற்ற பதக்கங்கள் இனி தேவையில்லை: பஜ்ரங் புனியா

மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பலரும் ஹரித்துவாரில் குவிந்துள்ளனர்.   

ADVERTISEMENT

மே 28ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்ற மல்யுத்த வீரர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டனர். 

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் சாா்பில் அளிக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு புகாா் மீது கைது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் ஜந்தா் மந்தரில் மல்யுத்த வீரா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். 

ADVERTISEMENT
ADVERTISEMENT