இந்தியா

பதக்கங்கள் கங்கையில் வீசப்படும்; சாகும்வரை உண்ணாவிரதம்: மல்யுத்த வீரர்கள்

30th May 2023 02:38 PM

ADVERTISEMENT

தில்லியில் போராடி வந்த மல்யுத்த வீரர்கள் தங்களின் பதக்கங்களை இன்று மாலை கங்கை ஆற்றில் விசப் போவதாக அறிவித்துள்ளனர்.

பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக 18 வயதுக்குக் குறைவான வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றஞ்சாட்டினா். இந்த விவகாரத்தில் அவரை கைது செய்ய வலியுறுத்தி ஜந்தா் மந்தரில் மல்யுத்த வீரா்கள் ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி வீரர்கள் சென்றபோது போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், மல்யுத்த வீரா்கள் வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கு தில்லி காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

இந்நிலையில், மல்யுத்த வீரர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

ADVERTISEMENT

“ஹரித்வாரில் இன்று மாலை 6 மணிக்கு நாங்கள் பெற்ற பதக்கங்களை வீசப் போகிறோம். இந்த பதக்கங்கள்தான் எங்கள் உயிர். இதனை ஆற்றில் வீசிவிட்டு நாங்கள் வாழ்வதற்கு எந்த அர்த்தமும் இல்லை. ஆகையால், இந்தியா கேட்டில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

Tags : wrestlers
ADVERTISEMENT
ADVERTISEMENT