இந்தியா

மல்யுத்த வீரர்களுக்காக குரல் கொடுத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

30th May 2023 07:21 PM

ADVERTISEMENT

 

மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே ஆதரவு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், நாட்டுக்காக பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் மே 28ஆம் தேதி நடத்தப்பட்ட விதம் அதிர்ச்சி அளிக்கிறது. முறையான பேச்சுவார்த்தை மூலம் எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு காண இயலும். விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். 

மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவான அனில் கும்ப்ளேவில் பதிவுக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க அவர்கள் பக்கம் நிற்க வேண்டிய நேரம் இது. இது போன்று எத்தனை விளையாட்டு வீரர்களுக்கு தைரியம் வரும் என பலர் பாராட்டி வருகின்றனர்.

ADVERTISEMENT

படிக்க கங்கையில் கரையும் பதக்கங்கள்! மல்யுத்த வீரர்கள் ஹரித்வார் வருகை!!

பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக 18 வயதுக்குக் குறைவான வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றஞ்சாட்டினா். 

 

 

இந்த விவகாரத்தில் அவரை கைது செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் மல்யுத்த வீரா்கள் ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி வீரர்கள் சென்றபோது காவல் துறையுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், மல்யுத்த வீரா்கள் வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கு தில்லி காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT