இந்தியா

மணிப்பூர் வன்முறை: குடியரசுத் தலைவருடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு

30th May 2023 12:14 PM

ADVERTISEMENT

மணிப்பூரில் காங்கிரஸ் உண்மைக் கண்டறியும் நடத்திய ஆய்வின் அடிப்படையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று மனு அளித்தார்.

மணிப்பூரில் சில வாரங்களுக்கு முன்பு இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து, ராணுவத்தினர் குவிக்கப்பட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறையை குறித்து ஆராய காங்கிரஸ் கட்சித் தரப்பில் மூன்று பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு களஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று மனு அளித்தார். இந்த சந்திப்பின்போது, உண்மைக் கண்டறியும் குழுவினர், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெய்ராம் ரமேஷ், “குடியரசுத் தலைவரிடம் மணிப்பூரின் நிலை குறித்த அறிக்கையை அளித்தோம். உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்நிலைக் குழு அமைப்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகள் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT