இந்தியா

சீதாராம் யெச்சூரியுடன் கேஜரிவால் சந்திப்பு!

30th May 2023 12:58 PM

ADVERTISEMENT


தில்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை சந்தித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பேசி வருகிறார்.

தில்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் கூறியது. இதையடுத்து தில்லியில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கேஜரிவால்.

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரைத் தொடர்ந்து இன்று மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் யெச்சூரியுடன் ஆதரவு கோரி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்த சந்திப்பின்போது, ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT