இந்தியா

அசாமின் முதல் வந்தே பாரத் ரயிலை தொடக்கிவைத்தார் பிரதமர் மோடி

DIN

புதுதில்லி: அசாமின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை திங்கள்கிழமை மதியம் காணொலிக் காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

குவகாத்தி ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அசாம் ஆளுநர் குலாம் சந்த் கட்டாரியா, முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா ஆகியோல் பங்கேற்றனர்.

காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பச்சைக் கொடியை அசைத்துவைத்து, வந்தே பாரத் ரயிலைத் தொடங்கிவைத்தார்.

இந்த அதிநவீன வந்தே பாரத் விரைவு ரயில் அசாம் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் கல்வி, வணிகம், வேலை வாய்ப்புத் துறைகளைமேம்படுத்த உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

குவகாத்தி - புதிய ஜல்பைகுரி பகுதிகளுக்கு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயில், விரைவில் அசாம் - மேற்கு வங்கம் இடையே இயக்கப்படும் வகையில் விரிவாக்கம் செய்யப்படவிருக்கிறது. இந்த தொலைவை இதுவரை இயக்கப்படும் ரயில்கள் 6.30 மணி நேரத்தில் கடக்கும் பட்சத்தில், வந்தேபாரத் ரயில் 5.30 மணி நேரத்தில் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில், வடகிழக்கு மாநிலங்கள், பிற மாநிலங்களுடனான ரயில்வே இணைப்புகளை பெறுவதில் முன்னிலையில் இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருள்கள் திருட்டு

ஏரல் சோ்மன் கோயிலில் அன்னபூரணி பூஜை

கோவையில் அண்ணாமலை வெற்றிக்காக விரலை துண்டித்துக் கொண்ட பாஜக பிரமுகா்

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் கோடைக்கால பயிற்சி முகாம்

பொறியியல் பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் போத்தனூரில் இருந்து இயக்கம்

SCROLL FOR NEXT