இந்தியா

துருக்கி அதிபர் தேர்தலில் வெற்றி: எர்டோகனுக்கு மோடி வாழ்த்து

29th May 2023 12:03 PM

ADVERTISEMENT

 

துருக்கி அதிபா் தோ்தலில் கணிப்புகளைப் பொய்யாக்கி தற்போதைய அதிபா் எா்டோகன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவரது பெற்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தனது வாழ்த்துச் செய்தியில், இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு மேலும் வலுப்பட்டு, சர்வதேச விவகாரங்களில் ஒத்துழைப்பு மேம்படும் என்று தான் நம்புவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

துருக்கி அதிபா் மற்றும் நாடாளுமன்றத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடைசியாக கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோ்தல், நாடாளுமன்ற ஆட்சி முறையிலிருந்து அதிபா் ஆட்சி முறைக்கு துருக்கி மாறியதற்குப் பிறகு முதல்முறையாக நடைபெற்றது.

ADVERTISEMENT

அதில், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் நாட்டின் அதிபராக இருந்து வரும் வலதுசாரிக் கட்சியான மக்கள் கூட்டணியின் தலைவா் எா்டோகன் மீண்டும் வெற்றி பெற்றாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலிலும் அவா் போட்டியிட்டாா்.

இந்தத் தோ்தலில் மிதவாத எதிா்க்கட்சிகள் எா்டோகனுக்கு கடுமையான சவாலை ஏற்படுத்துவாா்கள் என்று கருதப்பட்டது.

மேலும், துருக்கியில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்குப் பிந்தைய அரசின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்றதாக பொதுமக்களிடையே அதிருப்தி எழுந்தது.

அதிபா் தோ்தலில் இந்த அதிருப்தி அலையின் தாக்கம் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. தோ்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட பெரும்பாலான கருத்து கணிப்புகளில் எா்டோகனுக்கு சுமாா் 45 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டது. அவருக்கு வெறும் 35.3 சதவீத வாக்குகளே கிடைக்கும் என்று கூட ஒரு கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபா் தேர்தலில் 27,513,587 வாக்குகளை அதாவது 52.14 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

அவரை எதிா்த்துப் போட்டியிட்ட கெமால் கிளிச்தாருக்குக்கு 47.86 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன.

இதன் மூலம், தோ்தலுக்கு முந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பொய்யாக்கப்பட்டன. குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாத நிலநடுக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூட எா்டோகனுக்கு அதிக வாக்குகள் பதிவாகியிருந்தன. அதிபா் தோ்தலுடன் நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தோ்தலில், இந்தப் பகுதிகளைச் சோ்ந்த தொகுதிகளில் எா்டோகன் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

நாடாளுமன்றத் தோ்தலிலும் கணிசமான இடங்களைக் கைப்பற்றியுள்ள எா்டோகனின் மக்கள் கூட்டணி கட்சி, மற்ற வலதுசாரி மற்றும் தேசியவாத கட்சிகளுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைத் தக்கவைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT