இந்தியா

மங்களூரு விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு

DIN

மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது.

விமான நிலையத்தின் ஓடுபாதையில் அமைக்கப்பட்டிருக்கும் விளக்குகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, விமானங்கள் புறப்படுவதிலும், தரையிறங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டதாக, மங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்னை ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு தொடங்கியதாகவும், இதன் காரணமாக மும்பையிலிருந்து வந்த இண்டிகோ விமானம் கன்னூர் சர்வதேச விமான நிலையத்துக்குத்திருப்பிவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹ்ரைனுக்கு இரவு 8 மணிக்குப் புறப்பட வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் புறப்பாடு தள்ளிவைக்கப்பட்டது.  சென்னை மற்றும் பெங்களூருவிலிருந்து வரும் விமானங்களும் தாமதமாக வரவழைக்கப்பட்டது. பிறகு இரவு 10 மணியளவில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT