இந்தியா

ஆவணமின்றி ரூ.2000 நோட்டு மாற்றம்: பொதுநல வழக்கு தள்ளுபடி 

DIN

ஆவணங்கள் இன்றி ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம் என்ற விதிமுறையை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல மனுவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அண்மையில் அறிவித்தது. செப்டம்பா் 30-ஆம் தேதி வரை இந்த நோட்டுகளை வங்கிகளில் செலுத்தலாம் அல்லது சில்லறையாக மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தது. 

தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை வரும் 23-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஆர்பிஐ தெரிவித்தது.

இதையடுத்து ஒரே சமயத்தில் ரூ.20,000 மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் எனவும், பொதுமக்கள் எந்த வித படிவத்தையோ, அடையாள ஆவணமோ தர வேண்டியதில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்தது. 

மேலும், மக்களுக்கு எந்தவித இடையூரும் இன்றி ரூ.2000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பானப் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் ஆவணங்கள் இன்றி ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம் என்ற விதிமுறையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 

அந்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT