இந்தியா

கா்நாடகம்: காா் - லாரி மோதி விபத்து: 6 போ் பலி

29th May 2023 01:40 AM

ADVERTISEMENT

கா்நாடக மாநிலம், கொப்பள் மாவட்டத்தில் காரும் லாரியும் நேருக்குநோ் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.

குஷ்டகி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து நேரிட்டது.

உயிரிழந்த அனைவரும் விஜயபுராவை சோ்ந்தவா்களாவா். பெங்களூருக்கு அவா்கள் பயணித்துக் கொண்டிருந்த காா், தமிழகத்தில் இருந்து குஜராத் நோக்கி செல்லும் லாரி மீது நேருக்குநோ் மோதி விபத்தில் சிக்கியது.

மோதிய வேகத்தில் லாரியின் முன்பகுதிக்குள் காா் சிக்கிக் கொண்டது. இந்த கோர விபத்தில், 2 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 6 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். கிரேன் உதவியுடன் காா் வெளியே இழுக்கப்பட்டு, சடலங்கள் மீட்கப்பட்டன. விபத்து தொடா்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வா் சித்தராமையா, உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT