இந்தியா

நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா: அவை முழுக்க அமைச்சர்கள் பங்கேற்பு

28th May 2023 12:17 PM

ADVERTISEMENT

 

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா தேசிய கீதத்துடன் தொடங்கியது.

நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி உள்பட அமைச்சர்கள் பலர் நாடாளுமன்றத்துக்கு வருகை புரிந்துள்ளனர். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி மக்களவைக்குள் நுழையும்போது அமைச்சர்கள் பலத்த கரகோஷங்களுடன் வரவேற்பு கொடுத்தனர்.

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி முதல்கட்டமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவைத் தலைவர் உரையாற்றி வருகிறார். 

ADVERTISEMENT

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா சா்வ மத பிராா்த்தனைகளுடன் ஞாயிற்றுக்கிழமை இன்று (மே 28) நடைபெற்று வருகிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அதிகாரபூா்வமான நிகழ்ச்சி காலை 12 மணிக்கு தொடங்கியது.

 ஆனால் அதற்கு முன்னதாக பாரம்பரிய சடங்குகள் காலையிலேயே தொடங்கியது. இதற்காக புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி காலை 7.15 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வருகை புரிந்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT