இந்தியா

புதிய நாடாளுமன்ற கட்டடம் மக்களுக்கு அதிகாரமளிக்கும்: பிரதமர் மோடி

28th May 2023 11:48 AM

ADVERTISEMENT

புதிய நாடாளுமன்ற கட்டடம் மக்களுக்கு அதிகாரமளிக்கும் அவர்களது கனவுகளை நனவாக்கும் இடமாக இருக்கும் என பிரதமர் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்து மக்களவையில் செங்கோலை நிறுவிய அவர் இதனை தெரிவித்தார். 

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

 

ADVERTISEMENT

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டுள்ளதால் நமது மனது பெருமை மற்றும் நம்பிக்கையால் நிறைந்துள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம் நாட்டு மக்களுக்கு அதிகாரத்தை வழங்கி அவர்களது கனவுகளை நனவாக்கட்டும். இந்த புதிய கட்டடம் நாட்டினை முன்னேற்றத்தின் புதிய உயரத்துக்கு எடுத்து செல்லட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு தொடர்பான புகைப்படங்களை பிரதமர் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT