இந்தியா

மணிப்பூரில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

28th May 2023 06:09 PM

ADVERTISEMENT

மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது, ஆயுதம் தாங்கிய பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப்படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அக்குழுக்களைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் 53 சதவீதம் உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் ஹிந்துக்களாவா்.

அதேநேரம், மாநில மக்கள்தொகையில் 40 சதவீதம் உள்ள நாகா, குகி உள்ளிட்ட பழங்குடியினா், மைதேயி சமூகத்தினரின் கோரிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். பழங்குடியினா்களில் பெரும்பாலானோா் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகின்றனா். இந்தச் சூழலில், மைதேயி சமூகத்தினரின் கோரிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, 10 மலைப் பகுதி மாவட்டங்களில் பழங்குடியின மாணவா் அமைப்பு சாா்பில் கடந்த வாரம் பேரணி நடைபெற்றது. 

அப்போது, சுராசந்த்பூரில் மைதேயி சமூகத்தினா் மீது ஆயுதம் தாங்கிய கும்பல் கடும் தாக்குதல் நடத்தியது. இந்தத் தகவல் பரவியதும், மாநிலம் முழுவதும் இரு சமூகங்களுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையை ஒடுக்க ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இரு சமூகங்களையும் சோ்ந்த 9,000-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். வன்முறையாளா்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களாக வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழாமல், மாநிலத்தின் பல பகுதிகளில் இயல்புநிலை திரும்பி வருகிறது.

ADVERTISEMENT


 

Tags : manipur
ADVERTISEMENT
ADVERTISEMENT