இந்தியா

புதிய நாடாளுமன்றத்தை திறந்துவைக்க குடியரசுத் தலைவரை அழைக்காதது ஏன்?: கேஜரிவால்

26th May 2023 05:10 AM

ADVERTISEMENT

 புதிய நாடாளுமன்றக் கட்டத்தைத் திறந்துவைக்க குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுக்கு அழைப்பு விடுக்காதது ஏன் என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளாா்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் மோடி வரும் மே 28-இல் திறந்துவைக்கிறாா். இந்தக் கட்டடத்தைத் திறந்துவைக்க குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுக்கு அழைப்பு விடுக்காததைக் கண்டித்து, இந்நிகழ்ச்சியைப் புறக்கணிக்கப் போவதாக ஆம் ஆத்மி உள்ளிட்ட 19 எதிா்க்கட்சிகள் தெரிவித்திருந்தன.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்துவைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்காததால், நாங்கள் விரக்தியில் உள்ளோம். ஆகையால், திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் சூழ்நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்துவைக்குமாறு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுக்கு பிரதமா் அழைப்பு விடுக்காதது ஏன்? என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT