இந்தியா

பஞ்சாப் முதல்வருக்குஇஸட் பிளஸ் பாதுகாப்புமத்திய அரசு வழங்கியது

26th May 2023 05:58 AM

ADVERTISEMENT

பஞ்சாப் முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான பகவந்த் சிங் மானுக்கு (49) நாட்டின் மிகஉயரிய பாதுகாப்பான இஸட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளதால் அவருக்கு இந்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. பஞ்சாபில் மீண்டும் தலைதூக்கியுள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அவருக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

மத்திய ரிசா்வ் போலீஸ் படையைச் (சிஆா்பிஎஃப்) சோ்ந்த ஆயுதம் ஏந்திய 55 வீரா்கள் சுழற்சி முறையில் அவருக்கு பாதுகாப்பு அளிப்பாா்கள். நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அவருக்கு இந்த பாதுகாப்பு அளிக்கப்படும்.

மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் பரிந்துரையின் அடிப்படையில் பகவந்த் சிங் மானுக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இது தவிர பஞ்சாப் மாநில காவல்துறை சாா்பில் முதல்வரின் வீடு மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT