இந்தியா

நான்காம் காலாண்டு வருவாய்க்கு பிறகு எல்ஐசி பங்குகள் 2 சதவீதம் உயர்வு

DIN

புதுதில்லி: எல்.ஐ.சி. நிறுவனத்தின் நிகர லாபம், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ஐந்து மடங்கு உயர்ந்து 13 ஆயிரத்து 191 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் ஒரு பங்கின் விலை 1.69 சதவீதம் உயர்ந்து 603.60 ரூபாயாக முடிவடைந்தது. பகல் வர்த்தகத்தில் 3.72 சதவீதம் உயர்ந்து ரூ.615.65 ஆக இருந்தது. அதே வேளையில் தேசிய பங்குச் சந்தையில் 1.62 சதவீதம் உயர்ந்து 603.55 ரூபாயாக நிலைபெற்றது.

இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6,356.63 கோடி உயர்ந்து ரூ.3,81,776.86 கோடியானது.

இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் 2.55 லட்சம் பங்குகள் மும்பை பங்குச் சந்தையிலும், 51.87 லட்சம் பங்குகள் தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகமாயின.

இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனம் ரூ.2,409 கோடி லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் மார்ச் காலாண்டில் மொத்த வருமானம் ரூ.2,15,487 கோடியிலிருந்து ரூ.2,01,022 கோடியாக குறைந்துள்ளது என்று எல்.ஐ.சி தனது ஒழுங்குமுறை தாக்கல் செய்ததில் தெரிவித்துள்ளது.

2022-23 நிதியாண்டில், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் நிகர லாபம் ரூ.4,125 கோடியிலிருந்து பல மடங்கு அதிகரித்து ரூ.35,997 கோடியாக இருந்தது.

2023ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வருடாந்திர லாபம் ரூ.15,952 கோடியாக உயர்ந்துள்ளது. 

அதே வேளையில் செப்டம்பர் மாத இறுதியில் பங்குதாரர்களின் கணக்குகளுக்கு ரூ.15.03 லட்சம் கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

‘நித்தம் ஒரு அழகு..’

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

SCROLL FOR NEXT