இந்தியா

உத்தரகண்ட்: முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்

24th May 2023 05:06 PM

ADVERTISEMENT

 

உத்தரகண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக நாளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் டேராடூன் மற்றும் புதுதில்லி இடையே இயக்கப்படும் என்று மொராதாபாத் ரயில்வே கோட்டத்தின் மூத்த கோட்ட வணிக மேலாளர் சுதிர் சிங் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் தொடக்க விழாவில் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி டேராடூன் ரயில் நிலையத்தில் கலந்து கொள்வார் என்றார் சுதிர் சிங்.

முன்னதாக மே 18ம் தேதியன்று பூரி மற்றும் ஹவுரா இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸை பிரதமர் மோடி விடியோ கான்பரன்சிங் மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் வந்தே பாரத் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களையும் சென்றடைய வேண்டும் என்று பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார்.

ஹோவாரில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், வந்தே பாரத் ஜூன் மாதத்திற்குள் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களையும் சென்றடைய வேண்டும் என்று பிரதமர் மோடி இலக்கு. அதே வேளையில் வந்தே மெட்ரோ 100 கி.மீ.க்கும் குறைவான தூரத்திற்கும், பயணிகளின் தினசரி பயணத்திற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT