இந்தியா

70 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி 8 ஆண்டுகளில்.. ஏக்நாத் ஷிண்டே!

24th May 2023 06:54 PM

ADVERTISEMENT


நாட்டில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி 8 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். 

தில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டடத்தை வருகின்ற மே 28 ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இதற்கு எதிப்பு தெரிவித்து புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. 

இந்நிலையில் இது குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, நாட்டின் வளர்ச்சி உலக நாடுகளின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது. நாட்டில் கடந்த 70 ஆண்டுகளில் நடக்காத வளர்ச்சி 8 - 9 ஆண்டுகளில் நடந்துள்ளது. மக்களுக்கு எது உண்மை என்பது தெரியும். 2024ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், ஆட்சி அமையும் எனக் குறிப்பிட்டார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT