இந்தியா

உத்தவ் தாக்கரேவுடன் கேஜரிவால், பகவந்த் மான் சந்திப்பு

24th May 2023 02:20 PM

ADVERTISEMENT


தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் மகாராஷ்டிரத்தின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்துப் பேசினர். 

மும்பையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், உத்தவ் தாக்கரேவுடன், சஞ்சய் ரெளத்தும் கலந்துகொண்டனர். இதில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒன்றிணைவது குறித்தும் மாநில அரசின் உரிமைகளை காப்பது குறித்தும் பேசப்பட்டது. 

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை உத்தவ் தாக்கரே மற்றும் அரவிந்த் கேஜரிவால் கூட்டாக சந்தித்தனர்.

அப்போது அரவிந்த் கேஜரிவால் பேசுகையில், தில்லி அரசின் நிா்வாக அதிகாரங்கள் தொடா்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் இருக்க எங்களுக்கு ஆதரவு அளிப்பதாக உத்தவ் தாக்கரே வாக்குறுதி அளித்துள்ளார். வருகின்ற 2024 தேர்தலில் மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வராது எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

முன்னதாக, கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து அரவிந்த் கேஜரிவால் பேசியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT