இந்தியா

கர்நாடக பேரவைத் தலைவராக யு.டி. காதர் ஒருமனதாகத் தேர்வு!

24th May 2023 12:47 PM

ADVERTISEMENT

கர்நாடக சட்டப்பேரவைத் தலைவராக யு.டி. காதர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவகுமார் மற்றும் 8 அமைச்சர்கள் கடந்த 20 ஆம் தேதி பொறுப்பேற்ற நிலையில் தொடர்ந்து எம்எல்ஏக்கள் அனைவரும் பொறுப்பேற்றனர். தற்காலிக அவைத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே உள்ளார்.

இந்நிலையில் நிரந்தரமாக புதிய அவைத் தலைவரை தேர்வுசெய்யும் பொருட்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள்  கூட்டம் இன்று(புதன்கிழமை) காலை நடைபெற்றது.

கர்நாடக சட்டப்பேரவை தலைவர் பதவிக்கு  முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான யு.டி.காதர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேறு யாரும் வேட்புமனு செய்யாததால் யு.டி. காதர் ஒருமனதாக கர்நாடக பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

கர்நாடகத்தில் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்முறையாக சட்டப்பேரவைத் தலைவராவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க | நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு: காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிப்பு!

ADVERTISEMENT
ADVERTISEMENT