இந்தியா

ஐபிஎஸ் வாகனத்தை சேதப்படுத்திய நடிகை மீது வழக்கு!

23rd May 2023 09:50 PM

ADVERTISEMENT

 

ஹைதராபாத்: தெலங்கானாவில் ஐபிஎஸ் அதிகாரியின் வாகனத்தை சேதப்படுத்தியதாக தெலுங்கு நடிகை மற்றும் அவரது ஆண் நண்பர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

நடிகை டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது ஆண் நண்பர் ஆகியோர் தாங்கள் வசிக்கும் ஆடம்பரமான ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்  நிறுத்தப்பட்டிருந்த துணை போலீஸ் கமிஷனர் ராகுல் ஹெக்டேவின் வாகனத்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதாக டி.சி.பி.யின் ஓட்டுநர் அளித்த புகாரின்படி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட  கார் நிறுத்துமிடத்தில் வழக்கமாக காரை நிறுத்துவதாக, நடிகையும் அவரது ஆண் நண்பரும் அடிக்கடி தங்கள் வழியைத் தடுப்பதாகவும் தலைமைக் காவலர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

காரை சேதப்படுத்திய பிறகு, நடிகை வேண்டுமென்றே வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்த டிராபிக் கூம்புகளை உதைத்துள்ளார். இது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது என்றார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, புகாரின் அடிப்படையில், மே 17ஆம் தேதியன்று காவல் துறையினர் நடிகை மற்றும் அவரது ஆண் நண்பர் மீது ஐபிசி பிரிவுகள் 341, 353, 279 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நியைில், விசாரணை அதிகாரி கடந்த திங்கள்கிழமையன்று டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது ஆண் நண்பருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டு விசாரணைக்குப் பிறகு அவர்கள் மீது சிஆர்பிசியின் பிரிவு 41-ஏ இன் கீழ் நோட்டீஸ் அனுப்பினர்.

தெலுங்கில் கிலாடி, ராமா பானம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் டிம்பிள் ஹயாதி.

ADVERTISEMENT
ADVERTISEMENT