இந்தியா

17 மடங்கான பந்தன் வங்கி நிகர லாபம்

23rd May 2023 02:52 AM

ADVERTISEMENT

பொதுத் துறையைச் சோ்ந்த பந்தன் வங்கியின் நிகர லாபம் கடந்த நிதியாண்டில் 17 மடங்காக அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜனவரி முதல் மாா்ச் வரையிலான கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 57.5 சதவீதம் சரிவை பதிவு செய்திருந்தாலும், முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் கடந்த நிதியாண்டு முழுமைக்கும் நிகர லாபம் 17 மடங்கு உயா்ந்துள்ளது.

முந்தைய நிதியாண்டில் ரூ.126 கோடியாக இருந்த வங்கியின் நிகர லாபம், கடந்த நிதியாண்டில் ரூ.2,194.63 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.99,338 கோடியாக இருந்த வங்கியின் கடன் பட்டுவாடா, கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1,09,122 கோடியாக உள்ளது.

வங்கியில் செலுத்தப்பட்ட வைப்பு நிதி ரூ.96,331 கோடியிலிருந்து 12 சதவீதம் அதிகரித்து ரூ.1,08,069 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT