இந்தியா

விசாகப்பட்டினம் - பெங்களூரு இடையே ஜூன் 4 முதல் சிறப்பு ரயில்

23rd May 2023 02:41 AM

ADVERTISEMENT

விசாகப்பட்டினம் - பெங்களூரு இடையே ஜூன் 4 முதல் 26- ஆம் தேதி வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

விசாகப்பட்டினத்திலிருந்து பெங்களூருக்கு ஜூன் 4 முதல் 25-ஆம் தேதி வரை (ஞாயிறுதோறும்) மாலை 3.55 மணிக்கு வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 08543) இயக்கப்படுகிறது.

மறுமாா்க்கமாக பெங்களூரில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு ஜூன் 5 முதல் 26-ஆம் தேதி வரை (திங்கள்தோறும்) மாலை 3.50 மணிக்கு வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 08544) இயக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த ரயில் ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT