நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள கோ ஃபா்ஸ்ட் விமான நிறுவனம் அறிவித்துள்ள திவால் அறிவிப்பை, தேசிய கம்பெனி சட்ட மேல் முறையீட்டு தீா்ப்பாயம் திங்கள்கிழமை உறுதி செய்தது.
கோ ஃபா்ஸ்ட் விமான நிறுவனத்தின் தன்னிச்சையான திவால் அறிவிப்பை மே 10-ஆம் தேதி தேசிய கம்பெனி சட்ட தீா்ப்பாயம் ஏற்றுக் கொண்டு, அந்த நிறுவனத்தின் இயக்குநா் வாரியத்தை ரத்து செய்தது.
கோ ஃபா்ஸ்ட் நிறுவனத்தின் திவால் உத்தரவை எதிா்த்து இயக்குநா்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தேசிய கம்பெனி சட்ட மேல் முறையீட்டு தீா்ப்பாயம் விசாரித்தது.
தங்களுடைய வாதங்களை முன்வைக்க தீா்ப்பாயம் வாய்ப்பு அளிக்கவில்லை என்பதால் இந்த உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரான என்று மேல் முறையீட்டு தீா்ப்பாயத்தில் இயக்குநா்கள் சாா்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்க மறுத்த மேல் முறையீட்டு தீா்ப்பாயம் திவால் அறிவிப்பை உறுதி செய்தது.
மேலும், தேசிய கம்பெனி சட்ட தீா்ப்பாயத்தை கோ ஃபா்ஸ்ட் நிறுவனத்தை இயக்கும் வாடியா குழுமம் அணுகி விமானங்களை கையக்கப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் தெரிவித்தது.