இந்தியா

மத்திய புவி அறிவியல் துறை அமைச்சராக கிரண் ரிஜிஜு பொறுப்பேற்பு

19th May 2023 05:51 PM

ADVERTISEMENT

மத்திய புவி அறிவியல் துறை அமைச்சராக கிரண் ரிஜிஜு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த 2021-இல் கிரண் ரிஜிஜு சட்டத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதில் இருந்தே நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் நடைமுறை குறித்து கடும் விமா்சனங்களை முன்வைத்து வந்தாா். அதனால், மத்திய அரசுக்கும் கொலீஜியத்துக்கும் இடையேயான மோதல்போக்கு அதிகரித்துக் காணப்பட்டது.

இதனிடையே, கிரண் ரிஜிஜுவிடம் இருந்த சட்டத் துறையானது, அா்ஜுன் ராம் மேக்வாலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டது. மேலும் மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் கவனித்து வந்த புவி அறிவியல் துறையானது கிரண் ரிஜிஜுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய புவி அறிவியல் துறை அமைச்சராக கிரண் ரிஜிஜு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது ரிஜிஜு, தனது முந்தைய அமைச்சகத்தைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். முந்தைய அமைச்சகம் தொடர்பான கேள்விகளைக் கேட்க வேண்டாம். 

ADVERTISEMENT

ஏனெனில் அவை இனி பொருந்தாது. புவி அறிவியல் அமைச்சகத்தில் பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT